சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் நான்காவது பிரதான சாலையில் எம்.ஆர்.எச் 24 மணி நேர மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மழைக்கால சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
எம்.ஆர் மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் Dr.M R முரளி கிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைப்படி 24.12.2022 அன்று நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை
அண்ணா நகர் 8வது மண்டல குழு தலைவர் திரு.கூ.பி.ஜெயின் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
அந்த பகுதியில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மருத்துவ முகாமில் எம் ஆர் மருத்துவமனையின் அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாமை வெற்றிகரமாக நடத்த உதவிய திரு.சிட்கோ சேகர் , திரு.முரளி , கழக நிர்வாகிகள் , காவல்துறையினருக்கும் எம்.ஆர். எச் மருத்துவ குழுமத்தின் சார்பாக மேலான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறாம்.